திங்கள், 13 ஆகஸ்ட், 2012

யார் குற்றம் ?

அடுத்த தில்லுமுல்லு நடந்தது இன்னா ???

டி.என்.பி.எஸ்.சி தலைவர் நட்ராஜ் பேட்டி: முன்னதாக டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நட்ராஜ் தலைமையில் அவசரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் தேர்வு ரத்து செய்யப்படுவது அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த நட்ராஜ் கூறியதாவது, வினாத்தாள் தயாரிப்பு பணி போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் லீக் ஆகி இருப்பது வேதனை தருகிறது. மக்கள் மற்றும் பணியாளர்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும். சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும். விரைவில் புதிய வினாத்தாள் தயாரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படவுள்ளது. இதற்காக, குழு அமைக்கப்பட உள்ளது. வினாத்தாள் தயாரிப்பு, அதை தேர்வுமையங்களுக்கு அனுப்புதல் உள்ளிட்ட பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

இந்த முறையும் வினாத்தாள் வெளியானால் இன்னா பண்ணுவீங்க???
 (நம் நாட்டுல ராணுவ ரகசியமே லீக் ஆகுது )
 இதுக்கு முன்னாடி தேர்வு எழுதியவர்கள் எல்லாம் திறமைசாலியானவர்கள்தான??? என்பது கடவுளுக்கு (இருந்தால்) தான் வெளிச்சம்.
 முடிந்தால் தொலைக்காட்சியில் லைவ் இன்டர்வியூ வைத்து செலக்ட் பண்ணுங்க, எல்லாத்துலயும் நவீனத்தை புகுத்துரிங்க, இதுல மட்டும் என்ன விதி விலக்கு .....
 வாழ்க தமிழகம்... வாழ்க தமிழர் புகழ்...

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

ஆதங்கம்


கிரானைட் நிறுவனம் மோசடி 16 ஆயிரம்  ரூபாய் கோடி:
நல்ல விளம்பரம் ஆளுங்கட்சிக்கு, ஆனால் மோசடி செய்த பணம் திரும்ப வருமா என்பது என்னைபோன்ற பலரின் கேள்வி?
பணம் கொள்ளை அடித்தது யாருன்னு தெரியும்.  தொகை எவ்வளவு என்று தெரியும் ஆனால் பணத்தை கைப்பற்ற முடியாதா நாடு நாம் ஜனநாயக நாடு.

இதை செய்யா முடியாத எந்த அரசும் மக்கள் ஆட்சி நடதுக்கிறோம் என்று சொன்னால் அதுதான் உண்மையான  காமெடி.

செய்த தவறுக்கு தண்டனை கிடைக்கவேண்டும்.

பணம் மோசடி உண்மை என்றால் அதை திரும்பவும் கைப்பற்றி அரசாங்க கஜானாவுக்கு கொண்டு வரவேண்டும்.

இப்படி நல்ல வருமானம் வரக்கூடிய துறைகளை  அரசே ஏற்று நடத்த முன் வரவேண்டும் செய்யுமா இந்த அரசு????

இது நடக்கவில்லை என்றால் இந்த விசாரணை எல்லாம் வெறும் விளம்பரதுக்குதகத்தான் என்பது மறுக்க முடியாத உண்மை.                                           இந்த நாட்டின் மேல் அக்கறை வைத்துள்ள அனைவருக்கும் உள்ளத்தில் தோன்றும் என்னால் எழுத்தானது என்பதில் எனக்கு சந்தோஷம்.

தமிழன் என்று சொல்லட! தலைநிமிர்ந்து நில்லடா!