வியாழன், 3 ஜனவரி, 2013

வாய் சொல்லில் வீரர்கள்

ஒரு பெண்ணுக்கு பாடம் கற்பிக்கிறேன் என்று சொல்லி,
தன் தவறை ஒப்புகொண்டவனுக்கு தூக்கு, 
தண்டனை சரியே ........,நான் மறுக்கவில்லை., 

இரு நாடுகளுக்குள் போர் நடந்து அந்த ஒரு நாட்டை ராணுவம் கைபற்றினால் அந்த கைப்பற்றிய நாட்டிலுள்ள பெண்களை கற்பழிக்கும் ராணுவ செயலுக்கு வெற்றி.,
இவை ராணுவத்தில் எழுதப்படாத சட்டம் ., என்று சொல்ல கேட்டிருக்கிறேன் 
தவறுகள் ஒன்றே ஆனால் தண்டனைகள் மட்டும் பாரபட்சம், மனித உயிர்களின் விலை தெரியாதா சட்ட வல்லுனர்களுக்கு,
எந்த வயதில் எதை சொல்லி கொடுக்க வேண்டுமோ, அந்த வயதில் அதை சொல்லி கொடுப்பதில்லை,
பின்னாளில் அவன் செய்யும் தவறுகளுக்கு தண்டனை தர துடிக்கிறோம் ,
குற்றவாளிகளாய் நாம்,
கலாச்சார வாழ்வில் இந்தியா தான் உலகிலேயே ஓங்கி நிற்கிறது ,
காரணம் நமது பெண்கள் ,
பெண் சரித்தரம் படைப்பவள்,
ஆண் சாதனை, சரித்திரம் அடைவதெல்லாம் அவன் அடையும் துனையாலே,
தன் மகளுக்கு தரும் தைரியதையும் துணிச்சலையும் தன் மனைவிக்கு பாதி கூட கொடுக்காத நாம், பேச்சில் மட்டும் வீரர்கள்.,
நம் ஆழ்மனதில் இருக்கும் ஆதிக்க குணங்களை அழிப்போம்,

நான் இங்கே குறிப்பிட்டிருப்பது பெரும்பான்மையானவற்றை பற்றியே..,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக